நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் முதல் கால்நடை மருத்துவமனை அமைக்கும் கோபர்தானியின் திட்டத்திற்கு கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஒத்துழைப்பு: தங்கராஜ்

செலயாங்:

மலேசியாவின் முதல் கால்நடை மருத்துவமனை அமைக்கும் கோபர்தானியின் திட்டத்திற்கு கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் நாணய கூட்டுறவு சங்க நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் கூறினார்.

கோபர்தானி எனப்படும் குவாந்தான் செண்ட் தோமஸ் விவசாய கூட்டுறவு நிறுவனம் பூச்சோங்கில் இந்த கால்நடை மருத்துவனையை அமைக்கவுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு கட்டடங்களை கொண்டு இந்த கால்நடை மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

இம் மருத்துவமனை அமைவதற்கு கேகேபி கூட்டுறவு நிறுவனம் முழு ஆதரவை வழங்குகிறது.

குறிப்பாக கேகேபி கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இம்மருத்துவமனை அமையவுள்ளது.

ஆகவே நாட்டில் புகழ் பெற்ற கால்நடை மருத்துவமனையாக இந்த செண்ட் தோமஸ் கால்நடை மருத்துவமனை உருவாகும் என நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று தங்கராஜ் கூறினார்.

நாட்டில் அதிநவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனையாக இது அமையவுள்ளது.

குறிப்பாக பூனை, நாய்களை தவிர்த்து அனைத்து மிருகங்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படும்.

அதே வேளையில் இங்கு கால்நடை சிகிச்சைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது என்று கோபர்தானியின் தலைவர் டத்தோ டாக்டர் ரிட்சுவான் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset