நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது 

ஜார்ஜ்டவுன்: 

ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. லிம் கிட் சியாங்கிற்கு DARJAH UTAMA PANGKUAN விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விருது DATUK SERI UTAMA எனும் பட்டத்தைக் கொண்டு வரும் 

நாளை நடைபெறவிருக்கும் நிகழ்வில் பினாங்கு மாநில ஆளுநர் அஹ்மத் ஃபுசி அப்துல் ரசாக் இந்த விருதுகளை வழங்கவிருக்கிறார். சுமார் 142 பேர் பினாங்கு மாநில ஆளுநரிடமிருந்து விருதுகளை வழங்கவிருக்கிறார். அதில் முதல் நிலையில் லிம் கிட் சியாங் பெயர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு லிம் கிட் சியாங் மாட்சியமை தங்கிய மாமன்னரிடமிருந்து டான்ஶ்ரீ பட்டத்தைப் பெற்றார். 

கடந்த 1969ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 11 தவணைகளாக லிம் கிட் சியாங் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset