நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வெல்லும் முதல் மலேசியருக்கு 2 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும்: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

2024-ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக்கில் நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியருக்கு 2 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்க மூன்று நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார். 

Yinson Holdings Berhad, Matrix Concepts Holdings Berhad, MJ Health Screening Centre ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைந்து வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் பரிசு தொகை வழங்க முடிவு செய்துள்ளன. 

Yinson Holdings Berhad நிறுவனம் 1 மில்லியன் ரிங்கிட் வழங்கவுள்ள நிலையில் Matrix Concepts Holdings Berhad, MJ Health Screening Centre ஆகிய இரு நிறுவனங்களும் தலா 500,000 வழங்கவுள்ளன. 

பாரிஸில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் விளையாட்டு வீரருக்கு மொத்தம் RM2 மில்லியன் வழங்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, சீன கார் தயாரிப்பு நிறுவனமான செரி மலேசியா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனத்தை (SUV) பரிசாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 1 மணிக்கு நடைபெறுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset