நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அங்காசாவின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் 6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

அங்காசா மேலும் வலுப்பெறுவதுடன் சக்திவாய்ந்த அமைப்பாக செயல்பட அரசாங்கம் 6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக அங்காசா எனப்படும் மலேசிய கூட்டுறவுக் கழகங்களின் ஆணையத்திற்கு இந் நிதி ஒதுக்கப்படுகிறது.

இது பல அமைச்சுகள், ஏஜென்சிகளின் வாயிலாக ஒதுக்கப்படுகிறது.

குறிப்பாக  உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின்கீழ் மொத்தம் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

ரஹ்மா விற்பனைத் திட்டத்திற்காக இந்நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான 2025 ஆம் ஆசியான் கூட்டுறவு மாநாட்டிற்காக  1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

ஆசியான் கூட்டுறவு மாநாட்டின் ஏற்பாட்டாளராக அங்காசா விளங்குகிறது.

மேலும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிவாசல் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 500,000 ரிங்கிட் புதிய ஒதுக்கீடு அளிக்கப்படும்.

மேலும் கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு மாநாட்டில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவான் பெனடிக், துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அங்காசா தலைவர் டத்தோ அப்துல் ஃபத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset