நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்

கொல்கத்தா:

தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு  முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேர்மையான முறையில் நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வுகள் முகமையால் நடத்த முடியவில்லை என்றும் மேற்கு வங்கத்தில் கூட்டு நுழைவுத் தேர்வுகளை மீண்டும் மாநில அரசே நடத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset