நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்குத் திரும்ப வேண்டுமென்ற டி கியாவின் எண்ணம் ஈடேறவில்லை

லண்டன்: 

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாக எரிக் டென் ஹாக் 3-ஆவது தவணையாக நியமிக்கப்படுவதற்கு முன், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பும் எண்ணத்தை முன்னாள் கோல் காவலர் டேவிட் டி கியா கொண்டிருந்ததாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எரிக் டென் ஹாக் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாக இணைந்த  தருணத்தில், டேவிட் டி கியா அவ்வணியின் முன்னிலை ஆட்டக்காராகவும் கோல் காவலராகவும் விளங்கினார்.

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட சிக்கல் காரணமாக டி கியாவின் குத்தகை நீட்டிப்பட்டவில்லை.

12 ஆண்டுகாலமாக மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தொடர்ந்து விளையாடிய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டேவிட் டி கியாவின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமென பரவலாகப் பேசப்பட்ட நிலையில், கடந்த பருவத்தில் இறுதியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியால் அவர் கைவிடப்பட்டார்.

அவருக்குப் பதிலாக ஆண்ட்ரோ ஓனானாவை மென்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்தது.

ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததால், இலவச ஆட்டக்காரராக எந்த அணியில் வேண்டுமானாலும் இணையலாம் என்ற சூழலில் டேவிட் டி கியா இருந்தபோது, அவர் எந்தவொரு அணியிலும் இணையவில்லை.

தொடக்கத்தில் ஆண்ட்ரோ ஓனானா, மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய நிலையில், டேவிட் டி கியா மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்ப வேண்டுமென அதன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில் ஐரோப்பாவில் சிறந்த காலப்ந்து அணிகள் உட்பட சவூதி அரேபிய கால்பந்து அணிகளும் டி கியாவை குறி வைத்தன.

ஆனால் அவர், எந்த அணியிலும் இணையாமல் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்குத் திரும்பும் எண்ணத்தைக் கொண்டிருந்தார் என தி அத்லெட்டிக் ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த பிரிமியர் லீக் பருவத்தில் மோசமான அடைவுநிலையைப் பதிவு செய்த, மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி பொறுப்பிலிருந்து எரிக் டென் ஹாக் நீக்கப்படுவார் எனப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இங்கிலாந்து எப்.ஏ. கிண்ணத்தை வென்றதால், அவது சேவை அவ்வணியில் தொடர்கிறது.

இதன் காரணமாக டி கியவைன் கனவு நனவாகவில்லை. 

இதனிடையே 2024/2025 புதிய பருவத்தில் டேவிட் டி கியா எந்த அணியில் இணைவார் என பரவலாகப் பேசப்படுகின்றது.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset