நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்டிபிஎம் தேர்வில் ஶ்ரீ ஈப்போ உயர்நிலைக் கல்லூரியின் இந்திய மாணவர்கள் சாதனை

ஈப்போ:

எஸ்டிபிஎம் தேர்வில் ஶ்ரீ ஈப்போ உயர்நிலைக் கல்லூரியின் இந்திய மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகின.

ஈப்போவில்  உள்ள ஸ்ரீ ஈப்போ உயர் நிலைக் கல்லூரியைச் சேர்ந்த 91 மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வை எழுதியுள்ளனர்.

இதில் இந்திய மாணவர்கள சிறந்த மதிப்பெண்களைப் பெற்று  சாதனை படைத்துள்ளனர்.

இவர்களில் தமிழ்மொழி படத்தை தேர்வு பாடமாக எழுதிய 17 இந்திய  மாணவர்கள் சிறந்த மதிப்பெண களையும் பெற்றுள்ளதாக அக் கல்லூரியின் தமிழ்மொழியை போதிக்கும் ஆசிரியை நாகராணி சிமஞ்சலம் கூறினார்.

இந்த தேர்வை எழுதிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஈப்போ மகிழம்பூ எனும்  இ டத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான சாதனா சரவணன் 3.84 மதிப்பெண்களையும் மற்றொருவரான சாதிகா சரவணன் 3.67 மதிப் பெண்களையும் பெற்று ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset