நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை

புது டெல்லி:

சிவபக்தர்களின் காவடி ஊர்வலமான கான்வர் யாத்திரை செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் உரிமையாளர்களின் பெயர் இடம்பெறுவதை கட்டாயமாக்கிய உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவு முஸ்லிம் வர்த்தகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.இதற்கு பாஜக கூட்டணி கட்சிகளும் விமர்சித்தன.

இந்நிலையில், இந்த இரு மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா  தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் வகைகளைக் காட்சிப்படுத்த உத்தரவிடலாம். ஆனால், உணவக உரிமையாளர், பணியாளர்களின் பெயர், விவரங்களை வெளியிட கட்டாயப்படுத்த முடியாது' எனக் கூறி தடை விதித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset