நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்

புதுடெல்லி:

ஆரோக்கியம் குறித்து இந்திய மருத்துவ மன்றம் மற்றும் உலக உடல் பருமன் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்களைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்துள்ளது.

இந்தியாவில் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் ஒரு தீவிர கவலையாக உருவாகி வருகிறது.

சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த நன்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது அதிகரித்துள்ளது.

உடல் உழைப்பு குறைந்து வருகின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது குறைந்துள்ளது.

இதன் காரணமாக நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடல் பருமன் நோய்கள் அதிகரிக்கின்றன.

இந்தியாவின் மொத்த நோய் பாதிப்புகளில் 54 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகிறது.

இந்தியாவில் பெரியவர்களுக்கான உடல் பருமன் விகிதம் மும்மடங்கு அதிகமாக இருப்பதாக மதிப்பீடுகள் காட்டுகின்றன.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் உடல் பருமன் நோய் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

நகர்ப்புற ஆண்களில் 29.8 சதவீதம் பேரும், கிராமப்புற ஆண்களில் 19.3 சதவீதம் பேரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset