நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்

புது டெல்லி:

ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடையை 58 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு நீக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  எக்ஸ் வலைதளத்தில், 1947 ஜூலை 22இல் இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் மூவர்ணக் கொடிக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது. அதை முன்னாள் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் கண்டித்தார்.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு 1948, பிப்ரவரி 4ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அவர்  தடை விதித்தார். ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கடந்த 1966ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை 58 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அரசு ஊழியர்கள் மீது திணித்து அதிலும் அரசியல் செய்ய பிரதமர் மோடி முயற்சிக்கிறார். இது நடுநிலையாக செயல்படும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset