நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாட்சிமை தங்கிய மாமன்னரின் பதவியேற்பு விழா: மலேசியாவிற்கு மற்றொரு வரலாறு

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னரின் பதவியேற்பு விழா மலேசியாவிற்கு மற்றொரு வரலாற்று நிகழ்வாக அமையவுள்ளது.

நாட்டின் 17ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் இன்று அரியணையில் அமரவுள்ளார்.

இன்று இஸ்தானா நெகாராவில் மலாய் மன்னர்களின் பாரம்பரிய மரபுகள் அடிப்படையில் சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த விழா மலேசிய நாட்டிற்கு மற்றொரு வரலாற்று, குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையவுள்ளது.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரியணையில் அமர்ந்திருப்பதை உலகம் முழுவதும் அறிவிக்கும் நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.

குறிப்பாக  ஐந்து வருட காலத்திற்கு மலேசிய மக்களைப் பாதுகாக்கும் கிரீடமாகவும் இது அமைகிறது.

மாமன்னரின் இந்த முடிசூட்டு விழா மலேசியா மக்களை தவிர்த்து உலகளாவிய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க பன்னாட்டுத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset