செய்திகள் மலேசியா
குடிநுழைவுத் துறை ஜூன் 26 முதல் கட்டம் கட்டமாக 71 கிளைகளில் உள்ள கடப்பிதழ் சேவை மையங்களை தற்காலிகமாக மூடுகிறது
புத்ராஜெயா:
கணினி அமைப்பு பராமரிப்புப் பணிகளுக்காக, மலேசிய குடிநுழைவுத் துறை, நாடு முழுவதும் உள்ள 71 கிளைகளில் உள்ள கடப்பிதழ் சேவை மையங்களை, கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடவுள்ளது.
இந்த மூடல் காலத்தில், சேவை மையங்களில் கடப்பிதழ் விண்ணப்பிக்கும் நடைமுறைகள், MyOnline Passport வழியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் சம்பந்தப்பட்ட கிளைகளில் கடப்பிதழ் அச்சிடுதல் ஆகியவை சாத்தியமில்லை என்று குடிநுழைவுத் துறை சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக மூடல் நடவடிக்கைகள் பல கட்டங்களாக நடைபெறும். அதன் முதல் கட்டம் ஜூன் 26 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
முதல் கட்டத்தில் ஈடுபடும் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் புத்ராஜயா குடிநுழைவு தலைமையகம், ஜாலான் டூத்தா, மலாக்கா, கிளானா ஜெயா, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ஆகியவை ஆகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:02 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்: டத்தோ அசோஜன்
June 24, 2026, 8:01 am
அடுக்குமாடி குடியிருப்பில் உயர் கல்வி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: ஆடவர் கைது
June 24, 2026, 7:28 am
ஜோகூர் மாநில அடுத்த முதலமைச்சர் யார்?: மஸ்லி மாலிக்?
June 23, 2026, 5:35 pm
