செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்: டத்தோ அசோஜன்
ஜொகூர்பாரு:
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் ஒரு முக்கிய வாக்கு வங்கியாக இருப்பார்கள்.
அங்குள்ள 24 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 5% இந்திய வாக்காளர்கள் உள்ளனர் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன் கூறினார்.
இந்தத் தொகுதிகளில் மலாய், மலாய் அல்லாத வாக்காளர்களின் விகிதம் ஏறக்குறைய சமமாக உள்ள கலப்புப் பகுதிகளில் அமைந்துள்ளன.
கடந்த தேர்தலுக்குப் பிறகு, இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 80,000 அதிகரித்து, தற்போது கிட்டத்தட்ட 200,000 வாக்காளர்களை எட்டியுள்ளது.
2022 மாநிலத் தேர்தலில் சுமார் 120,000 இந்திய வாக்காளர்கள் இருந்தனர்.
கோத்தா இஸ்கந்தர் 18,000க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்களுடன் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டு பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஸ்கூடாய் (15,000), பெர்லிங் (14,700), டிராம் (13,800), புத்ரி வாங்சா (12,882) ஆகிய தொகுதிகள் உள்ளன.
இந்தத் தேர்தலில் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமூகத்திற்காக என்ன செய்துள்ளது என்பதையும் அதன் எதிர்காலத் திட்டங்களையும் இந்திய சமூகம் அறிந்துகொள்வதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார்.
முந்தைய தேர்தல்களில் மஇகா போட்டியிட்ட நான்கு தொகுதிகளில், பெர்லிங்கில் 14,700 வாக்காளர்களுடன் அதிக இந்திய வாக்காளர்கள் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து புக்கிட் பத்துவில் 4,200, கெமெலாவில் 1,900, கஹாங்கில் 800 வாக்காளர்கள் இருந்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:01 am
அடுக்குமாடி குடியிருப்பில் உயர் கல்வி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: ஆடவர் கைது
June 24, 2026, 7:28 am
ஜோகூர் மாநில அடுத்த முதலமைச்சர் யார்?: மஸ்லி மாலிக்?
June 23, 2026, 5:35 pm
