செய்திகள் மலேசியா
செயல்பாட்டுச் செலவுகள், அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, வரிவிதிப்பு ஆகியவற்றால் உணவக உரிமையாளர்கள் பெரும் பாதிப்பு: கணபதி ராவ்
கோலாலம்பூர்:
செயல்பாட்டுச் செலவுகள், அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, வரிவிதிப்பு ஆகியவற்றால் உணவக உரிமையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் இதனை கூறினார்.
மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரெஸ்மா), மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரிமாஸ்) ஆகியவற்றுடனான சந்திப்பில் இன்று நான் கலந்துக் கொண்டேன்.
ஜசெக ஆலோசகரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
செயல்பாட்டுச் செலவுகள், அந்நியத் தொழிலாளர்கள், வரிவிதிப்பு ஆகியவற்றால் உணவக உரிமையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் இதில் உள்ள சவால்கள், இத்துறையின் போட்டித்திறனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க இந்தக் கூட்டம் ஒரு தளத்தை வழங்கியது.
நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான உணவக உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரெஸ்மா, பிரிமாஸ் அமைப்புகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிய வாய்ப்பு கிடைத்தது.
மேலும் நியாயமான, நிலையான, பயனுள்ள கொள்கைகளை வடிவமைக்க உதவுவதில், தொழில் துறையினரின் குரல்களும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை.
இத்தொழில்துறையின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை நடத்திய பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி முகமது மோசின், பிரிமாஸின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி @ சுரேஷ், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி என்று கணபதிராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 5:35 pm
