செய்திகள் மலேசியா
அடுக்குமாடி குடியிருப்பில் உயர் கல்வி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: ஆடவர் கைது
பெட்டாலிங்ஜெயா:
பண்டார் சன்வேயில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
காலை சுமார் 11.03 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த தகவல் பெட்டாலிங் ஜெயா போலிஸ் துறைக்குக் கிடைத்ததாக அதன் துணை போலிஸ் தலைவர் ஹுசைன் சலாஹுடின் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸ் குழுவினர், பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் உயர் கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த, 20 வயது இருக்கும் பாதிக்கப்பட்டவரின் உடலில் பல காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் கண்டறிந்துள்ளன.
விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பவ இடத்தில் சுமார் 20 வயதுகளில் உள்ள ஒரு வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:02 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்: டத்தோ அசோஜன்
June 24, 2026, 7:28 am
ஜோகூர் மாநில அடுத்த முதலமைச்சர் யார்?: மஸ்லி மாலிக்?
June 23, 2026, 5:35 pm
