நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவின் நாட்குறிப்புப் பதிவுகள் கிழிக்கப்பட்டிருந்தன; வேறு யாரோ ஒருவர் வேறொரு பேனாவைப் பயன்படுத்தி அவரது நாட்குறிப்புப் பதிவுகளில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது: கையெழுத்து நிபுணர்

கோத்தா கினபாலு:

ஷாராவின் நாட்குறிப்புப் பதிவுகள் ல் கிழிக்கப்பட்டிருந்தன. வேறு யாரோ ஒருவர் வேறொரு பேனாவைப் பயன்படுத்தி அவரது நாட்குறிப்புப் பதிவுகளில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

தடயவியல் ஆவணப் பரிசோதகரும் சான்றளிக்கப்பட்ட கையெழுத்து நிபுணருமான டாக்டர் லிந்தினி கணேசன் கூறினார்.

மறைந்த ஷாரா கைரினா மகாதீருடன் தொடர்புடைய ஒரு நாட்குறிப்பிலிருந்து நூற்றுக்கணக்கான பக்கங்கள் அகற்றப்பட்டதாக அவர் மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

Y1 முதல் Y15 வரை குறியிடப்பட்ட அந்த ஆவணங்கள், WK9 எனக் குறிப்பிடப்படும், 'அன்பும் அமைதியும்' (Love and Peace) என்று எழுதப்பட்டிருந்த பச்சை நிற PVC உறையிடப்பட்ட புத்தகத்திலிருந்து வந்தவை என உறுதி செய்யப்பட்டன.

மேலும் அந்தப் பக்கங்கள் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

74ஆவது அரசுத் தரப்பு சாட்சி, தனது பரிசோதனையில், அதே வகையைச் சேர்ந்த 'அன்பும் அமைதியும்' என்ற புதிய குறிப்புப் புத்தகத்தில் 228 வரியிடப்பட்ட பக்கங்கள் இருந்தது.

ஆனால் WK9-ல் 106 வரியிடப்பட்ட பக்கங்கள் மட்டுமே இருந்ததாக கண்டறியப்பட்டது.

பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு WK9-லிருந்து அதிக எண்ணிக்கையிலான பக்கங்கள் அகற்றப்பட்டிருந்தன என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்








தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset