செய்திகள் மலேசியா
ஜோகூர் மாநில அடுத்த முதலமைச்சர் யார்?: மஸ்லி மாலிக்?
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 11ஆம் நடைபெறுகிறது.
அதில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 56 வேட்பாளர்களை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) நேற்று அறிமுகப்படுத்தினார்.
முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் (Maszlee Malik) உட்பட அனுபவம் வாய்ந்த தலைவர்களும் புதுமுகங்களும் வேட்பாளர்களாகத் தேர்வாகியுள்ளனர்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் புத்ரி வங்ஸா (Puteri Wangsa) தொகுதியில் போட்டியிடும் மஸ்லீக்கே அதற்கான வாய்ப்பு அதிகம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் குறிப்பிட்டன.
ஆனால் அவர் அந்த யூகங்களை மறுத்துள்ளார்.
அது குறித்து அன்வாருடன் தாம் பேசவில்லை என்றார் அவர்.
2018 முதல் 2020 வரை மஸ்லி முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
2022 மார்ச்சில் நடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் அவர் தோல்வி கண்டார். அதே ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலிலும் தோல்வியுற்றார்.
ஆயினும் அதிகம் அனுபவம் வாய்ந்த தலைவர் என்பதால் முதலமைச்சர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் என்று கருதப்பட்டுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:02 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்: டத்தோ அசோஜன்
June 24, 2026, 8:01 am
அடுக்குமாடி குடியிருப்பில் உயர் கல்வி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: ஆடவர் கைது
June 23, 2026, 5:35 pm
