நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரெய்லர் லோரியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஓட்டுநர் மரணம்

கூலாய்:

ஆறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில்  டிரெய்லர் லோரியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஓட்டுநர் மரணமடைந்தார்.

ஜொகூர் தீயணைப்பு,  மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதனை  கூறினார்.

இன்று காலை செடனாக்கிலிருந்து கூலாய் செல்லும் தெற்குப் பாதையில், 31.9 கிலோமீட்டர் தொலைவில் ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது.

கூலாய் ஓய்வெடுக்கும் பகுதிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் ஒரு கண்டெய்னர் லாரி, இரும்பு வேலிகளை ஏற்றிச் சென்ற ஒரு டிரெய்லர், ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு வேன், பளிங்கு கற்கள் ஏற்றிச் சென்ற 10 டன் லோரி, ஒரு டன் லோரி ஆகியவை சம்பந்தப்பட்டிருந்தது.

இதில் தாம் ஓட்டிச் சென்ற வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட டிரெய்லர் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இந்தச் சம்பவத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்ததால், பல மணி நேரம் சாலை மூடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் நான்கு சக்கர வாகனத்தின் 29 வயது ஓட்டுநர், வேனில் இருந்த 32, 29 வயதுடைய இரு ஆண்கள்,  சுங்க வரி விதிக்கப்பட்ட லோரியை ஓட்டிச் சென்ற 34 வயது நபர் உட்பட மற்ற நான்கு பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset