செய்திகள் மலேசியா
2029 ஜனவரி 1 முதல் சாலை விதிமீறல்களுக்கான புதிய அதிகபட்ச அபராதத் தொகையாக 500 ரிங்கிட் அமல்படுத்தப்படும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
வரும் 2029 ஜனவரி 1 முதல் சாலை விதிமீறல்களுக்கான புதிய அதிகபட்ச அபராதத் தொகையை 300 ரிங்கிட்டில் இருந்து 500 ரிங்கிட்டாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
இது, மக்களுக்குச் சுமையோ அல்லது அரசாங்க வருவாயை அதிகரிப்பதோ அல்லாமல், விதிமுறைகளுக்கு இணங்குவதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (சட்டம் 333) திருத்தத்திற்கு இணங்கவே உள்ளது.
300 ரிங்கிட்டில் இருந்து 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதன் அர்த்தம், அனைத்துக் குற்றவாளிகளுக்கும் தானாகவே 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்பதல்ல.
அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு, இந்தத் திருத்தம் அபராதத் தொகையின் அதிகபட்ச வரம்பை அதிகரிக்கிறது.
உண்மையான அபராதத் தொகையானது, குற்றத்தின் வகை, அதன் தீவிரத்தன்மை, அபராதத்தைத் தீர்ப்பதற்கான கால அளவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பொறுத்து அமையும்.
குற்றம் ஒன்றுதான், ஆனால் தண்டனை பொருத்தமானதாகவும், மேலும் திறம்பட்ட தடுப்பு விளைவைக் கொண்டதாகவும் இருக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இன்று மக்களவையில் சாலைப் போக்குவரத்து (திருத்த) மசோதா 2026-ஐ இரண்டாம் வாசிப்பின்போது தாக்கல் செய்தபோது அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 5:35 pm
