நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலையேறிகளுக்குப் பாதுகாப்புக் கவசம்: தேசிய டிஜிட்டல் பதிவு முறை விரைவில் அறிமுகம்

கோலாலம்பூர்: 

நாட்டில் அதிகரித்து வரும் மலை ஏற்றப் பயணிகளின் காணாமற்போகும் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், தேசிய அளவில் டிஜிட்டல் மலை ஏற்றப் பதிவு (Digital Hiking Registration Log System) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோ, இந்தப் புதிய முறை மலையேறிகளின் பயணத் தகவல்களை ஒழுங்குமுறையாகப் பதிவு செய்வதுடன், அவசரநிலை ஏற்பட்டால் அவர்களை விரைவாகக் கண்டறிந்து தேடுதல், மீட்பு (SAR) நடவடிக்கைகளை மேலும் துல்லியமாகவும் திறமையாகவும் மேற்கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, மலேசிய தீபகற்ப வனத்துறை (JPSM), மலேசிய விண்வெளி நிறுவனம் (MYSA) இணைந்து, புவியியல் தகவல் அமைப்பு (GIS), புவி இடவியல் (Geospatial) தொழில்நுட்பம், தொலை உணர்தல் (Remote Sensing) அடிப்படையிலான நவீன மலைப் பாதை மேலாண்மை அமைப்பை உருவாக்கி வருகின்றன.

இந்த அமைப்பு மூலம் மலை ஏற்றப் பாதைகள் வரைபடமிடப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், அனைத்து பாதைத் தகவல்களும் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். இதன் மூலம் மீட்புப் பணிகள் மேலும் வேகமாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கப்பட முடியும்.

மேலும், மலை வழிகாட்டிகளின் திறன், தொழில்முறை தரத்தை உயர்த்தும் நோக்கில், மலை ஏற்றப் பாதுகாப்பு, அபாய மேலாண்மை, முதலுதவி, உயிர் காக்கும் நுட்பங்கள், மீட்புப் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சான்றிதழ் பயிற்சிகளும் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.

நாட்டில் மலை ஏற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், காணாமற்போகும் சம்பவங்களும் உயர்ந்து வருவதை ஒப்புக்கொண்ட அமைச்சர், “பாதுகாப்பே முதன்மை” என்ற அணுகுமுறையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மலையேற்ற ஆர்வலர்கள், சுற்றுலா அமைப்புகள, மீட்புப் படையினர் இணைந்து செயல்பட்டால்தான் எதிர்காலத்தில் இத்தகைய துயரச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset