நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் சூறை

புது டெல்லி:

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது சங்க்பரிவார் கும்பல் தாக்குதல் நடத்தி சூறையாடியது பள்ளிவாசல் மீது அந்த கும்பல் காவிக்கொடியை ஏற்றியது. இந்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளிவாசலுக்கு அருகே இந்த முஸ்லிம்களின் வீடுகளையும் அந்தக் கும்பல் தாக்கியதில் 40 பேர் காயமடைந்தனர்.

முன்னாள் ராஜ்யசபா எம்பி சாம்பாஜி ராஜே சத்ரபதி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி கடந்த 15ம் தேதி இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த விடியோவை பகிர்ந்த மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் உவைசி, டிசம்பர் 6 தொடர்கிறது. சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கும்பல் தாக்குதல் சம்பவம் நடந்த பள்ளிவாசலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள விஷால்கர் கோட்டையை சட்டவிரோதமாக அத்துமீறி ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த கும்பல் அத்துமீறி பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கும்போது குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவளிப்பதன் விளைவுதான் இந்த வன்முறை.

ஜனநாயக சட்டங்கள் அமலில் உள்ள நாட்டில் சட்டவிரோதம் என்று கூறி முஸ்லிம்களைத் தாக்க இந்தக் குழுவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும், இந்த வன்முறை எந்தச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றும் ஃபைஸி கேள்வி எழுப்பினார்.

தாக்குதல் நடத்தியவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் முஸ்லிம்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் அவர்களை உடல்ரீதியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலின் தன்மையானது முஸ்லீம்களையும் அவர்களின் உடைமைகளையும் குறிவைத்து கவனமாக திட்டமிட்டுள்ளதை காட்டுகிறது. புனேவைச் சேர்ந்த சம்பாஜி ராஜே தலைமையிலான சங்பரிவார் குண்டர்கள் வன்முறைக்குப் பின்னால் இருப்பதாக அறிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால்கர் கோட்டைக்கு செல்ல முயன்ற அந்த கும்பல் கோட்டையின் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த கும்பல் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளது.

மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலின் முற்றிலும் தோல்வியுற்ற உத்தியை சங்பரிவார் மீண்டும் கையாண்டு வருகிறது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த சங்கப்பரிவார், தாங்கள் வளர்க்க முயலும் வெறுப்பு அரசியலில் சாமானிய மக்கள் இல்லை என்பதை இன்னும் உணரவில்லை. ஆனாலும் ஒற்றுமையை உடைத்து சமூகத்தில் மோதல்களை உருவாக்குகிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் வலுவான ஆதரவுடன் மகாராஷ்டிராவில் உள்ள 48 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணி, மாநிலத்தில் சங்பரிவார் கும்பல்களின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராக வாய் திறக்கவில்லை.

ஆகவே, குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவதை உறுதிசெய்யவும், அப்பகுதியில் உள்ள முஸ்லிம் சமூகம் அச்சமின்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ இந்தியா கூட்டணியின் வலுவான தலையீடுகள் அவசியம் என்றும் எம்.கே.ஃபைஸி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset