நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தடுப்பூசி செலுத்தியோரை உணவகங்களில் அனுமதியுங்கள்: குஜராத் உணவகங்கள் சங்கம் வேண்டுகோள் 

அஹமதாபாத்:

குஜராத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை உணவகங்களில் அனுமதிக்க வேண்டாம் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
இதுதொடர்பாக ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையாவது செலுத்திய வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

திருமணம் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால், கொரோனா பரவலை தடுக்க உணவகங்களின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
மூன்றாவது அலை தீவிரமடைந்தால், மீண்டும் பொதுமுடக்கம் அமலாகி தொழில் பாதிக்கும் என்பதால், இந்த முயற்சிகளை முன்னெச்சரிக்கையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset