நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது 25,424 வெள்ளி மதிப்புள்ள பர்கர் 

வாஷிங்டன்: 

பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் உருவாக்கிய பர்கர் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன் விலை  25,424 வெள்ளி மலேசிய ரிங்கிட் ஆகும். 

இந்தப் பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர்.

தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி மற்றும் பல சத்தான, விலை உயர்ந்த உணவு பொருட்களால் இந்தப் பர்கர் செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு பொருட்களின் பட்டியலில் தனது பர்கரும் ஓர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக ராபர்ட் கூறினார். 

மேலும் இந்தப் பர்கரின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பர்கர் கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

இதை ஒரு சாதனைக்காக மட்டும் உருவாக்கவில்லை. 

இந்தப் பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset