நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குற்றவியல் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம்: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

விவாகரத்தான முஸ்லிம் பெண்கள் கணவரிடம் இருந்து குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆர்பிசி) பிரிவு 125இன் கீழ்ஜீவனாம்ச தொகை கோரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தச் சட்டப் பிரிவு திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்றும் இதில் மதப் பாகுபாடு கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தெலங்கானாவில் விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அப்துல் சமது என்ற நபர் மாதந்தோறும் இடைக்கால ஜீவனாம்சமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதி செய்த தெலங்கானா உயர்நீதிமன்மறம், ஜீவனாம்ச தொகையை ரூ.10 ஆயிரமாக குறைத்தது.

இதை எதிர்த்து அப்துல் சமது தொடர்ந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125இன் கீழ் ஜீவனாம்ச தொகை கோர, விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு உரிமை இல்லை எனவும், இந்த விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986இன் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அப்துல் தரப்பில் வாதிடப்பட்டது.

இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவு அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரிவாகும். இந்தப் பிரிவின் கீழ், தனது கணவரிடம் இருந்து முஸ்லிம் பெண் பராமரிப்புத் தொகை பெறலாம். அந்தத் தொகையைப் பெறுவது திருமணமான அனைத்துப் பெண்களின் உரிமை. மதப் பாகுபாடின்றி இந்தச் சட்டப் பிரிவு திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும். 

வீட்டுப் பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கணவர்கள் டெபிட் கார்டுகள் அல்லது கூட்டு வங்கி கணக்கு மூலம் பணத்தை வழங்க வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset