நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா மத்திய செயலவை ஏற்றுக் கொண்ட பின் தான் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்தல் குழு தலைவராக செயல்பட்டார்: டத்தோ அசோகன்

கோலாலம்பூர்:

மஇகா மத்திய செயலவை ஏற்றுக்கொண்ட பின் தான் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்தல் குழு தலைவராக செயல்பட்டார்.

கட்சியின் உதவித் தலைவர் டத்தோ அசோகன் இதனை உறுதிப்படுத்தினார்.

மஇகாவின் உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முறையாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்தல் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மஇகா மத்திய செயலவை ஏற்றுக் கொண்ட பின் தான் அவர் தலைவராக செயல்பட்டார்.

தலைவராக செயல்பட்டாலும் அவர் தேர்தலில் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை.

ஆகையால் இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

அதே வேளையில் டத்தோ டி. மோகன் எங்களின் மூத்த தலைவர். அவரை பற்றி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

அதே போன்று அவர் தொடர்ந்து கட்சியுடனும் எங்களுடனும்  இணைந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று டத்தோ அசோகன் கூறினார்.

கட்சி தேர்தலுக்கு பின் மஇகா உதவித் தலைவர்கள், மத்திய செயலவையினர் இடையிலான முதல் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

கட்சியின் வளர்ச்சி, கட்சியை வலுப்படுத்தும் நடவடிகைகள் உட்பட பல விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

அதே வேளையில்  அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே எங்களின் இலக்கு என்று டத்தோ அசோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset