செய்திகள் மலேசியா
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
கோலா நெராங்:
கம்பூங் பெரிக் பகுதியில் உள்ள ஒரு மீன் குளத்தில் மூழ்கியதால், நான்கு வயது சிறுவன் நேற்று மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
மாலை 6.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், அய்யாஷ் அஹ்மத் சாஜித் அஹ்மத் என்ற சிறுவன் குபாங் பாசுவில் உள்ள ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பே அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
அந்தச் சிறுவன் வீட்டின் அருகே உள்ள மீன் குளம் அருகில் மணலில் விளையாடிக் கொண்டிருந்ததாகப் பெற்றோர் தெரிவித்ததாகப் பாடாங் தெராப் மாவட்ட துணை காவல் துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் அஃப்ஸானிஷாம் முஹம்மது ஷாம் கூறினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, குழந்தை காணாமல் போனதை கவனித்த பெற்றோர், சுற்றுப்புற பகுதிகளில் தேடத் தொடங்கினர்.
“மீன் குளத்தில் மிதந்த நிலையில் குழந்தையின் காலணியைக் கண்டதையடுத்து சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் குழந்தை மயக்க நிலையில் குளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
“உடனடியாக ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் குழந்தையின் உடல் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியாஹ் மருத்துவமனையில் (HSB) உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மரணத்தின் காரணம் நீரில் மூழ்கியதே என உறுதி செய்யப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:55 pm
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:48 pm
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
February 15, 2026, 9:46 pm
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
February 15, 2026, 9:44 pm
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
February 15, 2026, 9:42 pm
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
February 15, 2026, 9:40 pm
தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்
February 15, 2026, 9:37 pm
