செய்திகள் மலேசியா
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
கோலாலம்பூர்:
இன்று காலை கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வழியாக கிழக்கு கரை நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் 11 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஸ்லிம் ரிவர் முதல் தாப்பா வரை மெதுவாகவும் தொடர்ச்சியான நெரிசலுடனும் நகர்கின்றன என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
"தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் பண்டார் ஐன்ஸ்டேல் முதல் சிரம்பான் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு மெதுவாகச் செல்கின்றன," என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, வரும் சீன புத்தாண்டை முன்னிட்டு, பிப்ரவரி 14 நள்ளிரவு 12.01 மணிமுதல் பிப்ரவரி 15 இரவு 11.59 மணி வரை, 50 சதவீத சுங்கக் கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்து தகவல்களை PLUSLine இலவச எண் 1-800-88-0000, X தளம் @plustrafik, LLM இலவச எண் 1-800-88-7752, X தளம் @llmtrafik ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:55 pm
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:50 pm
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
February 15, 2026, 9:48 pm
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
February 15, 2026, 9:44 pm
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
February 15, 2026, 9:42 pm
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
February 15, 2026, 9:40 pm
தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்
February 15, 2026, 9:37 pm
