செய்திகள் மலேசியா
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
கோலாலம்பூர்:
நொரிடா அக்மல் ஆயோப், 45, சொந்த நாட்டிற்கு திரும்புவதை அவளது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அவளது அத்தை, உமி கல்சும் அஹ்மத், 67, அவளது மகன் மொஹமத் ஷஹ்னிஸம் பாஸ்ரி, 41, மூலம் நொரிடாவை தொடர்பு கொள்ளச் சென்றதாகக் கூறினார்.
“மகன் நொரிடாவுடன் தொடர்பு கொண்டதாகச் சொன்னார். அந்த நேரத்தில் நொரிடா தன்னிடம் பணமில்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். நாங்கள் அவருக்கு பணம் அனுப்பி உதவினோம்,” என்று கூறினார்.
உமி, சில ஆண்டுகள் கழித்து, நொரிடா தனது மகளுடன் மலேசியாவிற்கு திரும்ப விரும்புவதாக அவரிடம் கூறியதாகச் சொன்னார்.
“நொரிடா என்னிடம் மலேசியாவுக்கு எப்படி திரும்புவது என்று கேட்டார். திருமண வாழ்க்கையில் கணவரால் தாக்கப்படுவதைப் பற்றியும் பகிர்ந்தார். நான் அவரை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வழி தேடினேன்.
பின்னர், துணை உள்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா உடன் தொடர்பு கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் அவருக்கு கடிதம் அனுப்பினேன். இறுதியாக, நொரிடா எங்களிடம் திரும்பியுள்ளார்,” என்றார்.
நொரிடாவை நாட்டிற்குத் திருப்பி கொண்டு வர உதவிய உள்துறை துனை அமைச்சர், மலேசியா குடிநுழைவுத் துறை (JIM) உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.
“நொரிடாவிற்குப் பெற்றோர்கள் இல்லையாதலால் தற்போது அவர் எனது குடும்பத்துடன், லெங்காங், பேராக் பகுதியில் உள்ள கம்போங் புக்கிட் ஸாபியில் வசிக்கிறார்.
முன்னதாக, செய்தியாளர்கள் கடந்த 18 வருடங்களாக குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்த நொரிடா சொந்த ஊருக்குப் பாதுகாப்பாகத் திரும்பியதாகத் தெரிவித்தனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:55 pm
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:50 pm
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
February 15, 2026, 9:46 pm
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
February 15, 2026, 9:44 pm
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
February 15, 2026, 9:42 pm
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
February 15, 2026, 9:40 pm
தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்
February 15, 2026, 9:37 pm
