செய்திகள் மலேசியா
H5N1 வைரஸ் தாக்கம்: 2026ஆம் ஆண்டின் முதல் நோயாளர் கம்போடியாவில் பதிவு
ஃப்னோம் பென்:
கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காம்போட் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயது ஆண் ஒருவருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டின் முதல் பாதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“அந்த நபருக்குக் காய்ச்சல், இருமல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தன,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“மருத்துவக் குழுவின் தீவிர சிகிச்சையால் அவர் குணமடைந்து, பிப்ரவரி 14-ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.”
அந்த நபர் துவேக் சோ மாவட்டத்தில் உள்ள மீன்ரித் கிராமமத்தில் வசித்து வருகிறார்.
விசாரணையில் அவரது வீட்டில் கோழிகள் இறந்திருந்ததும், அவற்றை அவர் உடல்நலக்குறைவு ஏற்படும் மூன்று நாட்களுக்கு முன்பு சமைத்து சாப்பிட்டிருந்ததும் தெரிய வந்தது.
நோய்த்தொற்றின் காரணத்தை கண்டறியவும், சமூகத்தில் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைச் சுகாதார அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.
மேலும், பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க பயன்படுத்தப்படும் எதிர்ப்பு மருந்தான Tamiflu (oseltamivir) எனப்படும் மருந்து பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:55 pm
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:50 pm
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
February 15, 2026, 9:48 pm
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
February 15, 2026, 9:46 pm
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
February 15, 2026, 9:44 pm
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
February 15, 2026, 9:42 pm
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
February 15, 2026, 9:40 pm
