நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை

கோலாலம்பூர்: 

வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ள சீனப் புத்தாண்டை முன்னிட்டு, அனுமதியின்றி பட்டாசு, வானவேடிக்கை பொருட்களை வைத்திருப்பது, விற்பது, வாங்குவது அல்லது பயன்படுத்துவது கடுமையாகத் தடை செய்யப்படுவதாகக் காவல் துறை அறிவித்துள்ளது.

பாதுகாப்புக்கு ஆபத்தான எரிபொருள் பொருட்கள் இல்லாத ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ வகை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மலேசிய காவல் துறை அறிவித்ததாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறியுள்ளார்.

“இருப்பினும், இந்த இரு வகை பட்டாசுகளையும் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் தலைமையகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

“அனுமதி இல்லாத பிற பட்டாசுகளையும் வானவேடிக்கை பொருட்களையும் வைத்திருப்பவர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் மீது 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் பிரிவு 7, 8-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பட்டாசு, வானவேடிக்கை பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது பொதுமக்களுக்கு தொந்தரவு அல்லது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

“இந்த விதிமுறைகளை மீறினால், 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 13 , 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஏழு ஆண்டுகள் வரை சிறை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

எனவே, பண்டிகை காலத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து சமூக அமைதியையும் மக்கள் நலனையும் பாதுகாக்க வேண்டும் என ஃபாடில் கேட்டுக்கொண்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset