செய்திகள் மலேசியா
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
கோலாலம்பூர்:
2026-ஆம் ஆண்டின் ஐந்தாவது தொற்றுநோய் வாரம் (ME 5/2026) வரை, நாடு முழுவதும் 503 புதிய காசநோய் (டிபி) வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், இதுவரை பதிவான மொத்த காசநோயின் வழக்குகளின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது.
614 வழக்குகளுடன் சபா முன்னிலையிலும், அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் (476 வழக்குகள்) , சரவாக் (257 வழக்குகள்), ஜோகூர் (233 வழக்குகள்), கோலாலம்பூர்-புத்ராஜெயா (202 வழக்குகள்) பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (KKM) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பினாங்கில் 148 வழக்குகள், கெடாவில் 144, பேராக்கில் 127, கிளந்தானில் 96, பகாங் மாநிலத்தில் 81, திரெங்கானுவில் 60, நெகிரி செம்பிலானில் 58, மலாக்காவில் 42, பெர்லிஸில் 17, லாபுவானில் 16 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வரவிருக்கும் பண்டிகை காலம், நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு பொதுமக்கள் காசநோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாகச் சரியான இருமல் மற்றும் தும்மல் ஒழுக்கத்தை பின்பற்றுதல், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும், நீண்ட நாட்களாக இருமல், காய்ச்சல், பசியின்மை அல்லது உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
“இந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமல்லாமல், தன்னை, குடும்பத்தினரை, சமூகத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான சமூகப் பொறுப்பாகும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:55 pm
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:50 pm
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
February 15, 2026, 9:48 pm
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
February 15, 2026, 9:46 pm
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
February 15, 2026, 9:44 pm
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
February 15, 2026, 9:40 pm
தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்
February 15, 2026, 9:37 pm
