செய்திகள் மலேசியா
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
கூலிம்:
போலிஸாரைத் தூண்டிவிடும் வகையில் நடந்துகொண்டு, அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, ஒரு பாதுகாப்புப் படை உறுப்பினரின் முகத்தில் குத்தியதாக கூறப்படும் ஒரு பெண், சுங்கை கோப் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
வியாபாரியான 34 வயதுடைய அந்தச் சந்தேக நபர் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் போலீஸ் நிலையத்துக்கு வந்தாகக் கூலிம் மாவட்ட துணை போலீஸ் தலைவர், துணை கண்காணிப்பாளர் தெங்கு மொஹமத் ஃபைசல் தெங்கு யெங் கூறினார்.
அங்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தி, தூண்டுதல் செயலில் ஈடுபட்டதாக அந்நபர் குற்றம் சாட்டப்பட்டார்.
அப்போது, சந்தேக நபரை அமைதிப்படுத்த முயன்ற ஒரு ஆண் போலீஸ் அதிகாரியின் முகத்தில் அவர் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
“பிற்பகல் 3.45 மணியளவில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி வந்தபோது, அவரையும் மரியாதை குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு, புகார் கவுண்டரின் கதவை உதைத்து உடைத்துள்ளார்.
இதையடுத்து, மேலதிக விசாரணைக்காக அதே நாளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நேற்று முதல் நாளை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு, 1967 ஆம் ஆண்டின் போலீஸ் சட்டம் பிரிவு 90, குற்றச் சட்டம் பிரிவு 332, பிரிவு 426 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
மேலும், சந்தேக நபருக்கு இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாதவர் எனவும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:50 pm
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
February 15, 2026, 9:48 pm
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
February 15, 2026, 9:46 pm
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
February 15, 2026, 9:44 pm
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
February 15, 2026, 9:42 pm
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
February 15, 2026, 9:40 pm
தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்
February 15, 2026, 9:37 pm
