நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு

கூலாய்: 

45 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் அதிக லாபம் தருவதாக வாக்குறுதி அளித்த இல்லாத பங்குச் சந்தை முதலீட்டை வழங்கிய ஒரு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு RM219,320 இழந்துள்ளார்.

24 மணி நேரத்திற்குள் 10 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என கூறப்பட்ட விளம்பரத்தைப் நம்பிய பாதிக்கப்பட்ட பெண் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார் என்று கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் தான் செங் லீ கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 9 முதல் கடந்த வியாழன் வரை, மூன்று உள்ளூர் வங்கிகளுக்கு ஒன்பது முறை அவர் பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.

“முதலீட்டின் ஒவ்வொரு நகர்வும் லாபமும், பாதிக்கப்பட்டவரின் VI+Bull செயலியில் உள்ள கணக்கில் பதிவு செய்யப்படும் என கூறப்பட்டது. அதில், RM336,544 லாபம் கிடைத்ததாக அவர் கண்டறிந்தார்.

இருப்பினும், அந்த கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள முயன்றபோது அது தடைசெய்யப்பட்டது. தன்னை ஏமாற்றியதாகக் சந்தேகித்த அவர், நேற்று போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு, குற்றச் சட்டம் பிரிவு 420ன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset