செய்திகள் மலேசியா
‘பிரச்சினை தேடும் பழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகும்’: அன்வார்
ஈப்போ:
மக்கள் பிரச்சினையைத் தேடும் மனநிலையை விட்டு விலகி, சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல், ஒற்றுமையையும் கூட்டு முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
எல்லா நாட்டிலும் அறைகூவல்கள் இருக்கும். இருப்பினும் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவது சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் என்று தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் ஈப்போவில் உள்ள ஹுவா காந்தான் சீனப் பள்ளியில் நடைபெற்ற சீன புத்தாண்டு விழாவில் உரையாற்றும் போது இதை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் நகா கோர் மிங், கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடெகுடன் துணை அமைச்சர் வோங் கா வோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மலேசிய மக்கள் இன, மத, மொழிகளைக் கடந்து அனைத்து பண்டிகைகளையும் மரியாதையுடன் கொண்டாடுவது நாட்டின் பெரும் சாதனையாக இருப்பதாகப் பிரதமர் பாராட்டினார்.
“மலாய், சீனர், இந்தியர், இபான், கடாசான், பிற இன மக்கள் அமைதியாக ஒன்றாக வாழும் நாடுகள் உலகில் அதிகம் இல்லை.”
“நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பமாக, நட்புடன் வாழ வேண்டும். இது எளிதா? இல்லை. ஆனால் மனம் நல்லதாக இருந்தால், ஒருவரை ஒருவர் கவனித்தால், சிறந்த மலேசியாவாக மாற முடியும்,” என்றார் அவர்.
34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்ட மலேசியாவில் அமைதியாக வாழ முடிவதற்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அரசு உதவிகள் இன வேறுபாடின்றி, தேவையின் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
“ஒரு தலைவராக நான் பேசுவது மட்டும் போதாது. மக்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். தவறு இருந்தால் திருத்த வேண்டும்,” என்றார் அவர்.
ஒரு சமூகத்திற்கு உதவி வழங்கினால் விமர்சனம் வரும் என்பதையும் ஒப்புக்கொண்ட அவர், தலைமைத்துவம் என்பது நீதி, கருணையுடன் செயல்படுவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், கம்போங் பாரு காந்தான் பகுதியில் சாலை மேம்பாடு, பொது வசதிகள், வீடுகள் பழுது பார்க்க RM5 லட்சம் ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 9:57 pm
இல்லாத பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாற்றப்பட்ட பெண்: RM219,320 இழப்பு
February 15, 2026, 9:55 pm
போலிஸாரைத் தூண்டியதற்காகப் பெண் வியாபாரி கைது
February 15, 2026, 9:53 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘பாப்-பாப்’, ‘ஹேப்பி பூம்’ மட்டுமே அனுமதி: காவல் துறை
February 15, 2026, 9:50 pm
நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
February 15, 2026, 9:48 pm
லொம்போக் பிரிவினை முடிவு: 18 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நொரிடா
February 15, 2026, 9:46 pm
கோம்பாக்கிலிருந்து கிழக்கு கரை நோக்கிச் செல்லும் போக்குவரத்து 11 கிலோமீட்டர் வரை நெரிசல்
February 15, 2026, 9:42 pm
மலேசியாவில் காசநோய் மீண்டும் தீவிரம்: 5 வாரங்களில் 503 பேர் பாதிப்பு
February 15, 2026, 9:40 pm
தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்
February 15, 2026, 9:37 pm
