
செய்திகள் உலகம்
விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் மரணம்
டெஹ்ரான்:
ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் மாண்டார்.
ஷாபார் கோனராக் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாரேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தை அவர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜேக்டேக் எனும் விமானப் பாதுகாப்பு நிறுவனம் அந்தச் சம்பவம் குறித்த தகவலை வெளியிட்டது.
அந்த ஊழியர் போயிங் 737-500 ரக விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு கருவியை விட்டுச் சென்றதை உணர்ந்தார்.
அதை எடுப்பதற்காகத் திரும்பச் சென்றபோது இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தால் அவர் உள்ளே இழுக்கப்பட்டார்.
அந்தப் பாதுகாப்புப் பகுதிக்குள் யாரும் உள்ளே செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
உள்ளே சென்ற ஊழியர் இழுக்கப்பட்டதும், இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனால் ஊழியரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஈரான் விமானப் போக்குவரத்து ஆணையம் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm