
செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்ப்பில் ஊழல் கூறுகள் இருப்பதை தேசிய கணக்காய்வுக் குழு குறிப்பிடவில்லை: வழக்கறிஞர் அம்ரித் சிங்
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப்பில் ஊழல் கூறுகள் இருப்பதை தேசிய கணக்காய்வுக் குழு குறிப்பிடவில்லை என்று வழக்கறிஞர் அம்ரித் சிங் கூறினார்.
எச்ஆர்டி கோர்ப் தொடர்பான தேசிய கணக்காய்வுக் குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
இவ்விவகாரம் குறித்து எம்ஏசிசியில் புகார் செய்யப்பட்டது.
ஆகையால், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக தொழில் ரீதியாக விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எம்ஏசிசி இப்போது தான் எச்ஆர்டி கோர்ப் அலுவலகத்திற்கு சென்றுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
அதே வேளையில் எச்ஆர்டி கோர்ப் நிர்வாகத்தில் ஊழல் அல்லது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற கூறுகளை தேசிய கணக்காய்வுக் குழு ஒருபோதும் குறிப்பிடவில்லை.
இருந்தாலும் இது தொடர்பில் பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சட்டப் பயிற்சியாளராக, எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒரு நபரை தண்டிக்க முடியாது.
குறிப்பாக இன்றைய சமூக ஊடகங்களின் கருத்துகளை வைத்து நாம் யாரையும் தண்டிக்க முடியாது.
காரணம் அதன் ஊகங்களுக்கு எல்லைகளே இல்லை என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 10:32 pm
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது: கோபிந்த் சிங்
February 7, 2025, 10:29 pm
99 ஸ்பீட்மார்ட் நிறுவனர் இப்போது மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்
February 7, 2025, 10:28 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் பேச்சுத் தடை உத்தரவை டத்தோஶ்ரீ நஜிப் எதிர்க்கிறார்
February 7, 2025, 6:31 pm
தைப்பூச விழாவை இந்து மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்
February 7, 2025, 6:25 pm