நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

46 ஆண்டுகளுக்கு பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறக்கப்படுகிறது

புவனேஷ்வரம்:

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட உள்ளது.
பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள், பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கோயில் நிர்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வழங்கவுள்ளது.

1978ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், வரும் ஜூலை 14ம் தேதி பொக்கிஷ அறையை திறக்கலாம் என மாநில அரசுக்கு பரிந்துரை வழங்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக விஷ்வநாத் ராத் தெரிவித்தார்.

மேலும்,பொக்கிஷ அறையின் மாதிரி சாவியைக் கொண்டு அறையை திறக்க முடியவில்லை என்றால் பூட்டை உடைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset