நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் வங்கிகளில் இனி OTP அறிவிப்பு முறை நிறுத்தப்படும்

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரில் உள்ள பெரிய வங்கிகள் மின்னஞ்சல் மோசடிக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தவிருக்கின்றன. 

OTP எனப்படும் ஒரு முறைக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் முறை இனி கட்டங்கட்டமாக அகற்றப்படும். 

அடுத்த மூன்று மாதத்திற்குள் அது செயல்படுத்தப்படும்.

சிங்கப்பூர் நாணய வாரியமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் அதனை அறிவித்தன. 

DBS, OCBC, UOB முதலிய வங்கிகள் மாற்றத்தைச் செயல்படுத்தவிருக்கின்றன. 

ஊடுருவல்காரர்கள் OTPஐக் களவாட முடியும் அல்லது பயனீட்டாளர்களிடம் மோசடி செய்து அதைப் பெற்றுவிடவும் முடியும். 

Digital token எனும் மின்னிலக்க அடையாள வில்லையைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பாக அமையும் என்று நாணய வாரியமும் வங்கிகள் சங்கமும் தெரிவித்தன.  

சிங்கப்பூரில் மின்னஞ்சல் மோசடி தொடர்ந்து கவலைக்குரிய ஒன்றாகவே இருந்துவருகிறது. 

காவல்துறைப் புள்ளிவிவரங்களின்படி, சென்ற ஆண்டு அத்தகைய மோசடிகளின் மூலம் சுமார் 14 மில்லியன் வெள்ளியைப் பயனீட்டாளர்கள் இழந்தனர்.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset