நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய பகடிவதைக்கு இலக்காகி தற்கொலை செய்துக்கொண்ட ஈஷா: நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும்: தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் உறுதி 

கோலாலம்பூர்: 

இணைய பகடிவதைக்கு இலக்காகி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட ஈஷா என்னும் இந்திய இளம் பெண் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் உறுதியளித்தார். 

டிக் டாக் வாயிலாக வலம் வந்துக்கொண்டிருந்த அப்பெண் நெட்டிசன்களால் இணைய பகடிவதைக்கு இலக்கானார். அத்துடன் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். 

முன்னதாக, ஈஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில், அன்னாரின் நல்லுடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். 

அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக தமது அமைச்சும் காவல்துறை தரப்பும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset