நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2040-ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்த சுகாதார அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது: ஜுல்கிஃப்லி அஹமத் 

புத்ரா ஜெயா: 

2040-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்த சுகாதார அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார். 

தற்போது நாட்டில் புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கை 175-ஆக உள்ளது.

இந்த எண்ணிக்கை 2040-ஆம் ஆண்டளவில் 400 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜுல்கிஃப்லி தெரிவித்தார். 

மருத்துவப் புற்றுநோயியல் துறையில் ராயல் காலேஜ் ஆஃப் ரேடியலஜிஸ்ட்ஸ் (FRCR) பெல்லோஷிப்பில் மலேசியாவின் பங்கேற்புடன் இலக்கை அடைய முடியும் என்றார் அவர்.

தேசியப் புற்றுநோயியல் மையத்தின் FRCR திட்டத்தில் சிறந்து விளங்கும் மற்றும் பங்கேற்பதற்கான மையமாக தொடர்ந்து செயல்படும். 

நாட்டில் புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சுகாதார அமைச்சின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset