நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது: டத்தோஶ்ரீ ஆர்.ரமணன்

சுங்கை பூலோ: 

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு 481 மில்லியன் ரிங்கிட் நிதி  ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் தெரிவித்தார்.

இந்த வெள்ளத் தடுப்பு திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

ஏற்கனவே இதற்கான குத்தகை முடிந்து அது குறித்த அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்ட குத்தகையாளருக்கு வழங்கப்பட்டதைச் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் உறுதிப்படுத்தினார். 

இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும்,16 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் சுங்கை சுபாங்கில்  அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

சுங்கை பூலோவில் இது போன்ற பெரிய திட்டத்திற்கு இதுவரைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்ததில்லை. 

ஆனால் தற்போது இந்த வெள்ள தடுப்புத் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவ்வேளையில் டத்தோஶ்ரீ ரமணன் அவருக்குத் தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். 

வெள்ள அபாயத்தைக் குறைக்க மற்றொரு முயற்சி உள்ளது.

அதாவது சுங்கை பூலோ வெள்ளத் தடுப்பு திட்டம் இரண்டாம் கட்டமாகக் கிட்டத்தட்ட RM780 மில்லியன் மதிப்பீடு இன்னும் முன்மொழிவு கட்டத்தில் உள்ளது என்றார் அவர்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி உட்பட நாடு முழுவதும் வெள்ள அபாயத்தை குறைக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.

சுங்கை பூலோ பாராளுமன்றத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ரமணன், தற்போதைய நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முதல் மறுமொழி குழு (FRT) பிரிவின் மூலம் நாடாளுமன்ற சேவை குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக ஊனமுற்றோர் (OKU), முதியோர்கள், ஒற்றைத் தாய்மார்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், அவர்களின் சொந்த வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக FRT பிரிவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset