நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்களை மீண்டும் விண்ணப்பிக்க பொதுமக்களுக்குக் கட்டணம் விதிக்கப்படாது: சைஃபுடின் தகவல் 

கோலாலம்பூர்:

வெள்ளத்தால் சேதமடைந்த அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகிய ஆவணங்களை மீண்டும் விண்ணப்பிக்க பொதுமக்களுக்குத் தேசியப் பதிவிலாகா துறை கட்டணம் விதிக்காது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்நடவடிக்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை ஓரளவு குறைக்க முன்னெடுக்கப்பட்டதைச் சைஃபுடின் நசுத்தியோன் உறுதிப்படுத்தினார். 

வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது காணாமல் போன அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகிய ஆவணங்களுக்குப் பொதுமக்கள் பதிவிலாகா துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு காணொலியின் வாயிலாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தாமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

மக்கள் நலனை உறுதி செய்வதில் ஐக்கிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM13 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சைபுடின் நன்றி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset