நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்

தங்சோங் மாலிம்:

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு பொது மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் அல்லது தற்போது நாட்டின் வருவாயிலிருந்து பில்லியன் கணக்கான பணத்தைத் திருடும் நபர்களின் செயலை அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அவர் கூறினார்.

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. 

நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்கள் அரசு வளர்ச்சியைக் காரணம் காட்டி பணத்தைக் கொள்ளயடிப்பது தவறான செயலாகும். 

இதேவேளை, நாட்டின் கசானாவிலிருந்து திருடி சொத்துக்களை குவித்த முன்னாள் தலைவர்களுக்கு, அந்தப் பணத்தை மக்களுக்கும் நாட்டுக்கும் திருப்பித் தருமாறு பிரதமர் சவால் விடுத்தார்.

தேசத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகள் உண்மையில் பின்பற்றப்படாதபோது சம்பந்தப்பட்டவர்கள் வெறுமனே பேசக்கூடாது என்று அவர் கூறினார்.

நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த மலாய் தலைவர்கள், பில்லியன் கணக்கான ரிங்கிட் வைத்திருப்பவர்கள் உண்மையான போராளிகள் என்பது உண்மையானால், எனது கேள்வி, இப்போது உங்களிடம் எவ்வளவு இருக்கிறது? 

ஓர் உண்மையான போராளியாக, நீங்கள் திருடிய பணத்தை மக்களிடமும் நாட்டிடமும் ஒப்படைப்பது நல்லது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset