நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனம், மதம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்: பேரரசர் சுல்தான் இப்ராஹிம் புத்தாண்டு உரை 

புத்ரா ஜெயா:

தேசிய மஆல் ஹிஜ்ரா புத்தாண்டு கொண்டாட்ட விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பேரரசியார் ராஜா சரித் சோஃபியா (Raja Zarith Sofiah) ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் அவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். 

விழாவில் நாட்டின் வளப்பத்திற்கும் மக்களின் நல்வாழ்விற்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. 

அதன் பின்னர் தொக்கோ  மஆல் ஹிஜ்ரா 1446/2024க்கான தேசிய விருதை பினாங்கின் முன்னாள் முஃப்தி டத்தோஸ்ரீ ஹாஜி ஹசன் ஹாஜி அஹ்மதுக்கும் சர்வதேச விருதை உலக உலமா ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷேய்க் அலி மொஹியுத்தீன் அலி அல் கரடாகி  (Syeikh Prof Dr Ali Muhyiddin Ali Al-Qaradaghi) யும் பெற்றுக்கொண்டனர். 

May be an image of 6 people, dais and text

சமூக ஊடக தளங்களை வாதப் பிரதிவாதங்களுக்கான இடங்களாக மாற்ற வேண்டாம் என்றும், மற்றவர்களை அவமானப்படுத்தவும் நாட்டு மக்களிடையே பிளவுக்கும் மோதலுக்கும் பயன்படுத்த வேண்டாம் என மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது இஸ்லாமிய புத்தாண்டு செய்தியில் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். 

பெருமானார் (ஸல்) அவர்களின் தியாகமும் புலம் பெயர்ந்த நடவடிக்கையையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறிய பேரரசர் தீவிரவாதத்திற்கு எதிராகவும், குறிப்பாக இனம், மதம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேரரசர் எச்சரித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset