நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் முதலீடுகளில் கிட்டத்தட்ட 98 சதவீதம் லாபகரமானவை 

கோலாலம்பூர்: 

மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் முதலீடுகளில் கிட்டத்தட்ட 98 சதவீதம் லாபகரமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HRD கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் குழுவிற்கு நிர்வாகம் அளித்த அறிக்கையில், HRDC 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் RM69 மில்லியன் முதலீட்டில் இருந்து  அதிகபட்ச நிகர லாபத்தைப் பெற முடிந்தது.

இது HRD கார்ப்பரேஷனின் RM 3.6 பில்லியன் மதிப்புள்ள மொத்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் 98.7 சதவீதமாகும்.

HRD கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் குழுவிற்கு நிர்வாகம் அளித்த அறிக்கையில், ஏஜென்சியின் மொத்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் 1.3 சதவீதம் அல்லது RM49 மில்லியன் மட்டுமே நம்பத்தகாத இழப்புகளைப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது,

கடந்தாண்டு ஜூன் 30, நிலவரப்படி முதலீடுகளின் வருமானம் RM56 மில்லியனாகவும், டிசம்பர் 31,2023 வரை முதலீடுகளின் நிகர லாபம் RM106 மில்லியனாகவும் இருக்கும்" என்று அது வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே குறிப்பில், எச். ஆர். டி கார்ப்பரேஷனின் நிர்வாகம் எப்போதும் நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதாக மீண்டும் உறுதிப்படுத்தியது,

முன்னதாக, மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முடிவுகள் நடைமுறைகளுக்கு இணங்கவில்லை என்றும், நிறுவனத்தின் நிறுவன செயல்பாடுகளை அடைவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அடையாளம் காணப்பட்ட முறைகேடுகளுக்காக மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைக்கு எதிராக மனிதவள அமைச்சு  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய கணக்காய்வு குழுத் தலைவர் வான் சுராயா கூறினார்.

முதலாளிமார்களிடமிருந்து பெறப்பட்ட லெவி கட்டணம் மூலமாக ஹெச் ஆர் டி க்கு 3.77 பில்லியன் ரிங்கி பெறப்பட்டது. கிடைக்கப்பெற்ற இந்த நிதியானது முதலீட்டு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாக தேசிய கணக்காய்வு சிறப்பு செயற்குழு குறிப்பிட்டிருந்தது.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset