நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் குரலுக்கு ஒற்றுமை அரசு மதிப்பளிக்கிறது; சுங்கை பாக்காப் தோல்வியை ஏற்றுக் கொள்வோம்: பிரதமர்

கோலாலம்பூர்:

மக்களின் குரலுக்கு ஒற்றுமை அரசு மதிப்பளிக்கிறது. ஆகையால் சுங்கை பாக்காப் தோல்வியை ஏற்றுக் கொள்வோம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் தோல்வி கண்டார்.

ஒற்றுமை அரசு இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறது. குறிப்பாக மக்களின் குரலுக்கு அரசு மதிப்பளிக்கிறது.

சுங்கை பக்காப் மாநில சட்டமன்றத்தின் மக்களின் குரலை பிரதமராக நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அதே வேளையில் மடானி கொள்கையில் தீவிரமான திட்டங்களை முன்னெடுக்க ஒற்றுமை அரசு இலக்கு கொண்டுள்ளது.

மக்களின் நலனை  பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மடானியின் அரசாங்கம் இந்த முடிவை உணர்கிறது.

அதே நேரத்தில் மக்கள்,நாட்டின் கண்ணியத்தையும் பதவியையும் உயர்த்தும் நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset