நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் அசோகன், முருகையா, நெல்சன் வெற்றி

கோலாலம்பூர்:

மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ அசோகன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

டத்தோ டி. மோகன் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டார்.

மஇகா உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

பல மணி நேரம் வாக்குகள் எண்ணப்பட்டு முதல் கட்டமாக உதவித் தலைவருக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மஇகாவின் தேசியத் தலைவரும் தேர்தல் குழு தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனுமதியுடன் டத்தோ செல்வ மூக்கையா  இதனை அறிவித்தார்.

இதில் உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ அசோகன் 8,633 வாக்குகளை பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

டத்தோ முருகையா 8,566 வாக்குகளும் டத்தோ நெல்சன் 8,338 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றனர்.

டத்தோ டி. மோகன் 8,280 வாக்குகளைப் பெற்றார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset