
செய்திகள் மலேசியா
வெளிநாடுகளில் இருந்து வருவோர் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு அனுமதி
கோலாலம்பூர்:
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து மலேசியா வந்தடைந்த பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தங்கள் வீடு அல்லது வசிப்பிடத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பது வசதியாகவும் sopக்களை பின்பற்றும் வகையில் இருப்பதாகவும் கருதும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஏற்பாட்டை பின்பற்றலாம் என அந்த அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்வோர், ‘பிசிஆர்’ பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள விரும்பினால் இணையம் வழி பெயரைப் பதிவு செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, மலேசியாவிற்குள் நுழைவதற்கு ஏழு முதல் பத்து நாள்களுக்கு முன்பே விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதுபோன்ற விண்ணப்பங்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து வரும் நிலையில், தற்போது ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது என்கிறார் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2025, 10:41 am
பெருநாள் காலத்தில் நாட்டில் உணவுப் பொருட்களின் கையிருப்பு போதுமான அளவிலுள்ளது: மாட் சாபு
March 29, 2025, 10:26 am
மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார்: பிரதமர் அன்வார்
March 28, 2025, 8:29 pm
இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், சூராவ்கள் தான் சமுதாயத்தின் அடையாளங்கள்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
March 28, 2025, 5:01 pm
மியான்மார் நிலநடுக்கம்: பேங்காக்கில் சரிந்த கட்டடத்துக்குள் 40க்கும் அதிகமானோர் சிக்கினர்
March 28, 2025, 11:46 am
இஸ்லாமிய சமய மத போதகர் ஜம்ரி வினோத்துக்கு இரண்டு நாட்கள் தடுப்பு காவல்
March 28, 2025, 11:45 am