நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியன்மாரில் நிலநடுக்கம்: மனிதாபிமான பணி, பேரிடர் மேலாண்மைக்கு உதவ மலேசிய உதவிக் குழு மியன்மார் செல்கிறது

கோலாலம்பூர்: 

மியன்மாரை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகளில் உதவுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, நட்மா ஒரு சிறப்பு உதவிக் குழுவை மியான்மரின் யாங்கோனுக்கு அனுப்பவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சிறப்பு உதவிக் குழு நாளை காலை மியன்மார் புறப்படவுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

அதிகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறப்பு உதவிக் குழு செயல்படும் என்றும் அவ்வறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரு நாடுகளும் நிர்ணயித்த முன்னுரிமைகளுக்கு ஏற்ப, பேரிடர் மீட்பு முயற்சிகளில் மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு உதவ ஆசியான் தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset