நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘G’ என்ற எழுத்தைத் தவறாக எழுதியதற்காக 6 வயது மாணவியின் காதை திருகிய மழலையர் பள்ளி தலைமையாசிரியைக்கு RM2,000 அபராதம் 

அம்பாங்:

‘G’ என்ற எழுத்தைத் தவறாக எழுதியதற்காக 6 வயது மாணவியின் காதை திருகி காயப்படுத்தியதற்காக  அம்பாங்கில் உள்ள ஒரு மழலையர் பள்ளி தலைமையாசிரியைக்கு ஷெஷன்ஸ் நீதிமன்றம் RM2,000 அபராதம் விதித்தது.

61 வயதான தலைமையாசிரியைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, நீதிபதி நூருலிஸ்வான் அகமது ஜூபிர் இந்தத் தண்டனை விதித்தார். 

அபராதத்தை செலுத்தத் தவறினால் அவருக்கு 20 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் படி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இது அதிகபட்சமாக 1 வருடம் சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டும் விதிக்க வழிவகை செய்யும்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடமிருந்து இது குறித்து புகாரளிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset